தமிழகம்

திமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 1 தொகுதி

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு கட்சிகளும் வரவிருக்கும் தேர்தலில் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. எந்த தொகுதி என்பது தோழமைக் கட்சிகளோடு பேசி முடிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என திமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT