தமிழகம்

ரூ.500 கோடி பேரமா? - தேர்தல் ஆணையத்திடம் புகார்: அன்புமணி ராமதாஸ் தகவல்

செய்திப்பிரிவு

திமுக, தேமுதிக இடையே ரூ.500 கோடி பேரம் பேசியதாக கூறப் படும் குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. பாமக தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “திமுக, தேமுதிக இடையே ரூ.500 கோடி பேரம் பேசப்பட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தேர் தல் ஆணையத்திடம் புகார் அளிக் கப்படும். அனைத்து மாவட்டங் களிலும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண ‘உங்கள் ஊரில் உங் கள் அன்புமணி’ என்ற பிரச்சாரப் பயணத்தை வரும் 28-ம் தேதி தூத்துக்குடி மற்றும் நெல்லையில் தொடங்குகிறேன்.

தினமும் 2 மாவட்டங்கள் வீதம் 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறேன்.

பாமக தேர்தல் அறிக்கை ஓரிரு வாரத்தில் வெளியிடப்படும். வணிகர் சங்கங்கள் மற்றும் விவ சாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினை களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பாமக சென்னை மாவட்டம் சார்பில் தென்சென்னை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்தது. கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலை மையில் நடந்த கூட்டத்தில் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ர.செ.வெங்கடேசன் உட்பட பலர் கலந்துக் கொண்ட னர்.

SCROLL FOR NEXT