தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக்கோரி நகை கடை உரிமை யாளர்கள் நடத்தி வந்த கடை யடைப்பு போராட்டம் தமிழகம், புதுச்சேரியில் நேற்று தற்காலிக மாக வாபஸ் பெறப்பட்டது. மற்ற மாநிலங்களில் கடையடைப்பு போராட்டம் தொடர்கிறது.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியை ரத்து செய்ய கோரி வரும் 7-ம் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என நகைக் கடை உரிமையாளர்கள் அறிவித்தனர். இதற்கிடையே, 4-வது நாளாக நேற்று முன்தினம் வரையில் நாடு முழுவதும் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் கடையடைப்பு போராட்டம் நேற்று காலை முதல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 35 ஆயிரம் நகைக் கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 4 நாட்களுக்கு பிறகு நகை கடை கள் திறக்கப்பட்டதால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து இருந்தது. சென்னையில் தியாகராய நகர், மாம்பலம், பிராட்வே, புரசைவாக் கம், மயிலாப்பூர், அடையார், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நகை கடை களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்த குமார் கூறியதாவது:
தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரியை நீக்க கோரி தொடர்ந்து 4 நாட்களாக நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத் தினோம். இதனால், எங்களுக்கு ரூ.1,400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முகூர்த்த நாள் அதிகமாக வருவதால் அதிகமான வாடிக்கை யாளர்கள் தினமும் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதேபோல், பல்வேறு அவசர காலத்தில் நகை விற்க வரும் வாடிக்கையாளர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நேற்று காலை 10 மணி முதல் தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளோம். மேலும், எங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை பிரதமர் மோடியிடம் அளித்துள்ளோம். எங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். மும்பையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தையும் நடக்கவுள் ளது. இந்த பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு வரும் என எதிர் பார்க்கிறோம் என்றார்.