தமிழகம்

புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு: ஜன.7-க்குள் அறிக்கை தர அரசுத்துறைகளுக்கு உத்தரவு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு தரவும், தடுப்பூசி செலுத்தாதோர் குறித்து வரும் 7 ஆம் தேதிக்குள் துறை தலைவர்கள் அறிக்கை தரவும் அரசுத் துறைகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொள்ளாத அனைத்துத் துறை அரசு ஊழியர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது.

அதேபோல ஒப்பந்த ஊழியர்களை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் என அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும் உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டது‌.

மேலும், வரும் 07.01.2021 தேதிக்குள் 100% தடுப்பூசி என்பதனை உறுதிப்படுத்தி அறிக்கையை சுகாதாரத் துறைக்கு அனுப்ப சார்பு செயலர் புனிதா மேரி தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலக வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT