கடந்த 8 ஆண்டுகளாக வாடகை நிர்ணயிக்கப்படாமல் உள்ள வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான கடைகள். 
தமிழகம்

புதுச்சேரி: வாடகை நிர்ணயிப்பதில் அதிகாரிகள் அலட்சியம்; 8 ஆண்டுகளாக வாடகையே இல்லாமல் இயங்கும் கடைகள்: அரசுக்கு குறைந்தபட்சம் ரூ.18 லட்சம் வரை இழப்பு

செய்திப்பிரிவு

மாத வாடகை நிர்ணயிக்கக் கோரிதுணை ஆட்சியருக்கு கோப்பு அனுப்பி வைத்தும் பதில் வராததால் வட்டார வளர்ச்சி அலுவல கத்துக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் 8 கடைகள் எட்டு ஆண்டுகளாக வாடகை இல்லாமல் இயங் கும் வினோதம் புதுச்சேரியில் ஏற் பட்டுள்ளது.

புதுச்சேரியிலுள்ள வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான 8 கடைகள் பல ஆண்டுகளாக வாடகையே செலுத்தாமல் இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண் ணப்பித்தார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியப்பூட்டும் பதிலை தந்துள்ளனர்.

அதில், “பிடிஓ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைக ளுக்கு மாத வாடகை நிர்ணயம் செய்யக்கோரி வில்லியனூர் வரு வாய்த்துறை துணை ஆட்சியருக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் வராததால் இதுநாள் வரை வாடகை நிர்ணயிக்கப்படவில்லை. எனவே மேற்படி கடைகளுக்கு வாடகை வசூலிக்கப்படாமல் உள்ளது” என்று தந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆளுநர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

பொதுவாக ஒரு கடையை வாடகைக்கு விடும்போது வாட கையை நிர்ணயம் செய்த பின்னர்தான் ஒரு நிறுவனத்திற்கு வாட கைக்கு விடப்படுவது வழக்கம். ஆனால் இவர்கள் இந்த கடைகளை 2013, 2015, 2016-ம் ஆண்டுகளில் 8 கடைகளையும் வாடகை என்ற பெயரில் ஒப்படைத்துவிட்டு கடந்த 8 ஆண்டுகளாக வாடகை நிர்ணயம் செய்யாமலும், வாடகையே வசூல் செய்யாமலும் இருக்கின்றனர்.

குறிப்பாக, வருவாய்த் துறை யினர் வாடகை நிர்ணயம் செய்து அளிக்கவில்லை என்றாலும், அதற்கு தக்க நடவடிக்கை மேற் கொள்ளாததால் ஒரு கடைக்கு சுமார் ரூ.3 ஆயிரம் மாத வாடகை என்றால் கூட 8 கடைகளுக்கும் இதுநாள் வரை சுமார் 18 லட்சம்வாடகை வசூலித்திருக்க வேண்டும்.இதற்கு வில்லியனூர் பிடிஓ, துணை மாவட்ட ஆட்சியர் (தெற்கு) ஆகிய இரு துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.

அரசுக்கு குறைந்தபட்சம் ரூ.18 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதற்கு இந்த அதிகாரிகள் தான்பொறுப்பு.

8 ஆண்டுகளாக வாடகை நிர்ணயம் செய்து அளிக்காத வருவாய் (தெற்கு) துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீதும், விரைந்து நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அதிகாரியிடமும் துறை ரீதியான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT