மானாமதுரை வீரஅழகர் கோயில் அருகே நிறுத்தியிருந்த வாகனங்களை அகற்றிய போலீஸார். 
தமிழகம்

மானாமதுரை போலீஸாருக்கு எதிராக பாஜக புகார்: கோயில் அருகே இருந்த வாகனங்கள் அகற்றம்

செய்திப்பிரிவு

மானாமதுரையில் தெ.புதுக் கோட்டை சாலையில் காவல் நிலையம் எதிரே வீரஅழகர் கோயில் உள்ளது. இக்கோயில் வீர ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி முன்புற வாயில் கதவு அருகேயுள்ள இடத்தில் போலீஸார் பறிமுதல் செய்த, விபத்துக்குள்ளான வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.

மாதக்கணக்கில் வாகனங்களை நிறுத்தியதால் புதர்கள் மண்டி காணப்பட்டன. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து பாஜக கிழக்கு மண்டலத் தலைவர் சங்கரசுப்பிரமணியன் எஸ்பிக்கு புகார் அனுப்பி இருந்தார். மேலும் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன.

இந்நிலையில் கோயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நேற்று அகற்றப்பட்டன.

SCROLL FOR NEXT