தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. கரோனா,ஒமைக்ரான் பரவல் காரணமாக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மண்டலவாரியாக அதிகபட்சமாக சென்னையில் ரூ.41.45 கோடி,மதுரையில் ரூ.27.44 கோடி, கோவையில் ரூ.26.85 கோடி,திருச்சியில் ரூ.26.52 கோடி, சேலத்தில் ரூ.25.43 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டைவிட மது விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.159 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.
கடற்கரை உள்ளிட்ட பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது, மழை, சபரிமலை சீசன்உள்ளிட்டவற்றால் விற்பனை சரிந்துள்ளதாக விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.