முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கையை அதிமுக அரசு செய்ததுபோல திமுக அரசும் செயல்படுத்த வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தற்போது சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார். இதை எல்லோரும் வரவேற்கிறார்கள். அவரோடு சேர்ந்து அனைவரும் பணியாற்றி கரோனா பரவலை தடுக்க வேண்டும்.
உலகம் முழுவதும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பிரதமர் மோடி பறைசாற்றி வருகிறார். விரைவில் மதுரைக்கு வருகை தரவுள்ள பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்துவிட்டு தற்போது வரவேற்கிறது. இதிலிருந்தே திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ளளலாம் என்றார்.