புதுச்சேரியில் ஆம் ஆத்மி போட்டி யிடவில்லை. இதனால் தொண் டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக மாநில அமைப்பாளர் டாக்டர் ரங்கராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி தலைமை ஒப்புதல் தரவில்லை. அதனால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். நாங்கள் அடையாளம் கண்டுள்ள தொகுதிகளில் போட்டியிட அனுமதி தர கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தகவல் தெரிவித்தவுடன் அது தொடர்பான விவரங்கள் எழுத்துப் பூர்வமாக தெரிவித்து ஒப்புதல் பெறுவோம். ஆம் ஆத்மியில் கூட்டணி கிடையாது. தனித்துதான் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.