தமிழகம்

சென்னையில் கனமழை: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

செய்திப்பிரிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மழை, வெள்ளத்தால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய பயணிகள் பலர் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிக் கொண்டனர். அவா்களால் குறித்த நேரத்துக்கு விமான நிலையத்துக்கு வந்துசேர முடியவில்லை. பயணிகள் மட்டுமின்றி, விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான பொறியாளா்கள், தொழில்நுட்ப நிபுணர்களும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிக் கொண்டனர்.

இதனால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. நேற்று முன்தினம் இரவு 7 மணியில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணி வரை சென்னையில் இருந்து இலங்கை செல்லும் 4 விமானங்கள், துபாய், சிங்கப்பூா், ஹாங்காங் ஆகிய 7 சா்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூா், திருவனந்தபுரம், புவனேஸ்வா், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. ஆனால், சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT