தமிழகம்

தங்கம் விலை ரூ.22,360: பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்தது

செய்திப்பிரிவு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.2,320 அதிகரித்து, ஒரு பவுன் விலை ரூ.22,360 ஆக உயர்ந்தது.

சர்வதேச அளவில் தங்க முதலீடு, இந்திய பங்குச் சந்தை, ரூபாய் மதிப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் காரணமாக தங்கம் விலையும் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி (வியாழக்கிழமை) 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,797 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.22,376 ஆகவும் இருந்தது.

நேற்று முன்தினம் தங்கம் விலை திடீர் சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.292 என பவுனுக்கு ரூ.2,336 விலை குறைந்தது. இதனால், ஒரு கிராம் விலை ரூ.2,505 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.20,040 ஆகவும் குறைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்தது. கிராமுக்கு ரூ.290 என பவுனுக்கு ரூ.2,320 விலை அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் விலை ரூ.2,795, ஒரு பவுன் விலை ரூ.22,360 என ஏறக் குறைய கடந்த 10-ம் தேதி நிலவரத்தையே தங்கம் விலை எட்டியது.

தங்க நகைகள் மீதான மத்திய கலால் வரியை கண்டித்து நாடு முழுவதும் நகைக் கடைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மக்கள் தங்கம் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT