குளத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் கேட்டு வீரவநல்லூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தமிழகம்

திருநெல்வேலி: குளத்தில் வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த அரிராமகிருஷ்ணன் மகன் சைலப்பன். விவசாயியான இவர், அங்குள்ள மருதங்குளத்துக்கு கால்களை கழுவச் சென்றார். ஆனால்,உயர் அழுத்த மின்கம்பி அறுந்துகுளத்து தண்ணீரில் விழுந்திருந்ததால் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதை அறியாமல் குளத்தில் இறங்கிய சைலப்பன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீரவநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இச் சம்பவம் வீரவநல்லூர் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சைலப்பன் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை கேட்டும், அவரது 3 மகள்களின் கல்விச் செலவை அரசு ஏற்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய, வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நிவாரணத் தொகை அளிக்க உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT