கண்ணமங்கலத்தில் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன். 
தமிழகம்

சாலையின் தடுப்பு சுவரில் மோதிய வேன்

செய்திப்பிரிவு

வேலூரில் இருந்து ஆரணி மார்க்கமாக சொகுசு வேன் ஒன்று நேற்று சென்றது. தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் கூட்டுச்சாலை அருகே வந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் வேனில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சாலையின் நடுவே திடீரென தடுப்புச் சுவர் தொடங்கும் பகுதி அமைந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புப் பலகை வைக் கப்பட்டிருந்தால், விபத்துகள் தவிர்க்கப்படலாம் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். இது குறித்து கண்ணமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத் தினர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய வேன், அப்புறப்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT