தமிழகம்

57 லட்சம் போலி வாக்காளர்கள்: மத்திய அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி திமுக வழக்கு - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

தமிழக இறுதி வாக்காளர் பட்டிய லில் 57.43 லட்சம் போலி வாக் காளர்கள் சேர்க்கப்பட்டிருப் பதால் மத்திய அரசு அதிகாரி களைக் கொண்டு கள ஆய்வு செய்து சரிபார்க்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு வெளி யிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் தமிழகத்தில் 4 கோடியே 71 லட்சத்து 15 ஆயிரத்து 846 வாக்காளர்கள் இருந்தனர். 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 13 வயதில் இருந்து 17 வயது வரை உள்ளவர்கள் 50 லட்சத்து 56 ஆயிரத்து 70 பேர் இருந்தனர். 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்த வயதினர் 18 முதல் 22 வயதை எட்டியிருக் கலாம். இவர்களையும் சேர்த்தால் இப்போது 5 கோடியே 21 லட் சத்து 71 ஆயிரத்து 916 வாக்கா ளர்கள்தான் இருக்க வேண்டும்.

ஆனால், கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 482 வாக்காளர்கள் உள் ளனர். வாக்காளர்கள் எண் ணிக்கை திடீரென 1 கோடியே 7 லட்சத்து 99 ஆயிரத்து 636 அதி கரித்துள்ளது. ஏராளமான பேரை போலி வாக்காளர்களாக சேர்த் ததுடன், லட்சக்கணக்கானவர் களின் பெயரை வாக்காளர் பட்டி யலில் இருந்து நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் பலமுறை கடிதம் கொடுக்கப்பட்டது. வாக்காளர் பதிவு அதிகாரிகள், வாக்குச் சாவடி அதிகாரிகள் ஆகியோருக்கு அதிமுகவினருடன் சட்டவிரோத தொடர்பு இருப்பதால், திமுக நிர்வாகிகள், அவர்களது குடும்பத்தினர்கள் என 1 லட்சத்து 80 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் 57 லட்சத்து 43 ஆயிரத்து 566 பேர் போலி வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கள ஆய்வு தேவை

மத்திய அரசு அதிகாரி களை நியமித்து, திமுகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜென்ட் கள் முன்னிலையில் அண்மை யில் வெளியிடப்பட்ட இறுதி வாக் காளர் பட்டியலை கள ஆய்வு செய்து சரிபார்க்க தேர்தல் ஆணை யருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.சுப்பையா, இதற்கு பதில் அளிக்கும்படி மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

          
SCROLL FOR NEXT