பொதுமக்களின் வசதிக்காக தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் வெளியட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வரும் 19-ம் தேதி சனிக்கிழமை சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது. தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் நடைபெறும் இந்த சிறப்பு மேளாவில் 500 வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மேளாவில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் >http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்ப பதிவு எண் மற்றும் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வரவேண்டும். மேலும், இந்த சிறப்பு மேளாவில் தத்கல் முறையில் விண்ணப்பிக்க அனுமதி கிடையாது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.