தமிழகம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் மே மாதம் மின் உற்பத்தி: அணுமின் நிலைய வளாக இயக்குநர் உறுதி

செய்திப்பிரிவு

கூடங்குளம் 2-வது அணு உலை யில் மே மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் சமூகநல பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் குப்பை சேகரிப்பு ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்திலுள்ள அணுவிஜய் நகரியத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராதா புரம், உதயத்தூர், சிதம்பராபுரம், திருவம்பலாபுரம், கூத்தக்குழி, பரமேஸ்வரபுரம், விஜயாபதி, நவலடி ஆகிய கிராமங்களுக்கு தலா ரூ.3.9 லட்சம் மதிப்பிலான குப்பை சேகரிப்பு ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இதற்கான சாவிகளை அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந் தர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தற்போது மின் உற்பத்தி 750 மெகா வாட்டை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டும். முதலாவது அணுஉலையில் உற் பத்தியாகும் மின்சாரத்தில் 56 சத வீதம் தமிழகத்துக்கு வழங்கப்படு கிறது.

2-வது அணுஉலையில் வரும் மே மாதம் மின் உற்பத்தி தொடங் கும். 3 மற்றும் 4-வது அணு உலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின் றன என்றார் அவர்.

SCROLL FOR NEXT