தமிழகம்

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்குள் பூட்டுகளை உடைத்து குடியேறிய மக்கள்: போலீஸார் வெளியேற்றியதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

கொருக்குப்பேட்டையில் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளின் பூட்டை உடைத்து பொதுமக்கள் குடியேறி யதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கொருக்குப் பேட்டை அரங்கநாதபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட் டப்பட்ட 360 வீடுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் பல ஆண்டு களாக வசித்து வந்தனர். இந்த கட்டிடங்கள் பலவீனமானதை தொடர்ந்து, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே குடியிருந் தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்த காலியிடத்தில் சுமார் 100 குடும்பத்தினர் குடிசைகள் அமைத்து குடியிருந்து வந்தனர். பழைய வீடுகள் இடிக்கப் பட்டபோது, தங்களுக்கும் வீடுகள் கட்டித் தருவதாக இருந்தால் இந்த இடத்தை காலி செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களும் அங் கிருந்து வீட்டை காலி செய்தனர்.

பழைய வீடுகள் இடிக்கப் பட்டு புதிதாக 482 வீடுகள் அந்த இடத்தில் கட்டப்பட்டன. இந்நிலை யில் ஏற்கெனவே அங்கு குடி யிருந்த 360 குடும்பங்களுக்கும், புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரில் சாலை விரிவாக்கத்துக் காக அகற்றப்பட்ட 96 குடும்பங் களுக்கும், கொருக்குப்பேட்டை எழில் நகர் எம்ஜிஆர் தெருவில் கால்வாய் விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட 26 குடும்பங்களுக்கும் என மொத்தம் 482 குடும்பங்களுக்கு அரங்கநாதன் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதனால் குடிசைகள் அமைத்து தங்கியிருந்த 100 குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவில் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் பூட்டுகளை உடைத்து அதில் குடியேறினர். கொருக்குப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது, கஜலட்சுமி (50) என்பவர், மண்ணெண்ணெயை குடித்தும், உடலில் ஊற்றியும் தற்கொலைக்கு முயன்றார். போலீஸார் அவரை மீட்டு, அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பாப்பா (48) என்ற பெண் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயல, அவரை போலீஸார் பிடித்து தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவங்களால் அந்த இடம் பரபரப்பானது.

100 குடும்பத்தினரும் அதே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT