அதிமுக வசமிருந்த விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பாமக வசமிருந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர் பதவி திமுக வசமாகும் நிலை உருவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடலூர்,அண்ணாகிராமம், கம்மாபுரம்,குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், முஷ்ணம், கீரப்பாளையம், குமராட்சி, மேல் புவனகிரி, பரங்கிப்பேட்டை ஆகியவை அதி முக வசமும் உள்ளன. பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் திமுக வசம் உள்ளன. நல்லூர் ஒன்றியம் பாமக வசமும் உள்ளது. மங்களூர் ஒன்றியம் இழுபறியில் இருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மங்களூர் ஒன்றியம் தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் தலைவர் பொறுப்பை திமுக கைப்பற்றியது.
இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லத்துரை, கடந்த சில நாட்களாக திமுக கரைவேட்டியுடன் உலா வருகிறார். அதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் கடந்த 23-ம் தேதி 19 உறுப்பினர்களில் 4 பேர் தவிர ஏனைய உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் தலைவர் செல்லத்துரை கூட்டத்திற்கு வரவில்லை. இதையடுத்து உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வழங்கி விட்டுச் சென்றனர்.
இதனிடையே விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 7 சுயேச்சை உறுப்பினர்களுடன் ஒன்றிய தலைவர் செல்லத்துரை அமைச்சர் கணேசனை சந்தித்து, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அதிமு கவில் இணைந்தார். இதையடுத்து விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் திமுக வசமாவது உறுதியா கியுள்ளது.
இதற்கிடையே விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவரான செல்லத்துரை, விருத்தாசலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான கலைச்செல்வனின் பெயரை தனது கையில் பச்சைக் குத்தியிருக்கும் அளவுக்கு அவரது தீவிர ஆதரவாளராக இருந்தார். மேலும் அரைக் கை சட்டை அணியும் பழக்கமுடைய செல்லத்துரை, திமுகவில் இணைய அண்ணா அறிவாலயம் சென்ற போது பச்சைக்குத்தியிருப்பதை மறைப்பதற் காகத் தான் முழுக் கை சட்டை அணிந்து சென்றார் என்கின்றனர் அவர் வருகைக்கு எதிர்ப்புத் தெரி விக்கும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர்கள்.
இதற்கிடையே நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2019-ல் நடைபெற்ற தேர்தலின் போது திமுக, அதிமுகதலா 10 இடங்களை கைப்பற்றி யது. இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரான ரவிச்சந்திரன் என்பவர் மருத்துவ விடுப்பில்சென்றார். நல்லூர் ஊராட்சி ஒன்றி யத்தில் இரு உறுப்பினர்களைக் கொண்ட பாமக, அதிமுக துணை யோடு தலைவர் பதவியை கைப் பற்றியது. தற்போது அதிமுகவிற்கு, பாமகவிற்கும் இடையேயான கூட்டணி முறிவால், நல்லூரில் பாமக பதவியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவேநல்லூர் ஒன்றிய திமுக உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்திவிருத்தாசலம் கோட்டாட்சியரி டம் நேற்று முன்தினம் மனு அளித்துள்ளனர். இதனால் அங்கும் பாமக தனது தலைவர் பதவியைஇழக்கும் சூழல் உருவாகி உள் ளது. நல்லூர் ஒன்றியத்தையும் திமுக கைப்பற்றக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.