சிவகங்கை அருகே ஒக்கூர் சோமசுந்தரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் இயக்கப்படும் இலவச பேருந்தில் ஏறும் மாணவர்கள். 
தமிழகம்

சிவகங்கை அருகே கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்த தனியார் பள்ளி: இலவச பேருந்து சேவையும் வழங்குகிறது

இ.ஜெகநாதன்

சிவகங்கை அருகே கிராமப்புற மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவையோடு, கல்வி கட்டணத்தையும் தனியார் பள்ளி ரத்து செய்தது.

சிவகங்கை அருகே ஒக்கூரில் சோமசுந்தரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் இப்பள்ளி 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் தொடக்கப் பள்ளியாகவும், பிறகு படிப்படியாக தரம் உயர்த்தப் பட்டது. 1999-ம் ஆண்டு சுயநிதி பிரிவாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கள் தொடங்கப்பட்டன.

தற்போது பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் 160-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். ஆறு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் சுற்றுப்பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் பள்ளிக் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்ததை அடுத்து, 2019-ல் இருந்து கல்விக் கட்ட ணத்தை பள்ளி நிர்வாகம் ரத்து செய்தது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல இலவச பேருந்து சேவையும் வழங்கி வருகிறது. இதுகுறித்து ஆசிரி யர்கள் கூறியதாவது: இப் பள்ளியை நிறுவனரின் பேரன் சோமசுந்தரம் நிர்வகித்து வரு கிறார். அவர் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூறிவிட்டார். மேலும் அவரே சொந்த பணத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதோடு, பள்ளி வாகனத்தையும் இலவசமாக இயக்க அறிவுறுத்தி யுள்ளார் என்றனர்.

SCROLL FOR NEXT