தமிழகம்

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி: ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கி கணக்குகளை முடக்கிய காவல்துறை

இ.மணிகண்டன்

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கி கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17ம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 9 வது நாளாக தேடி வருகிறது.

கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி பாண்டிச்சேரி திருப்பதி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.

மேலும் தலைமறைவாக உள்ளகே.டி. ராஜேந்திரபாலாஜி வெவ்வேறு கார்களில் மாறி மாறிச்சென்று தலைமறைவாக உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் முன்னதாக அறிவித்திருந்தார்

தலைமறைவாக உள்ள கே.டி. ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிய நாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க்கபட்டுள்ளது. இந்நிலையில் பண பரிவர்த்தனை மூலம் அவரது நகர்வுகளை தடுக்கும் வகையில் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கி கணக்குகளை முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியை பிடிக்க காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கள் பாபுராஜ் பலராமன் முத்துப்பாண்டி ஆகியோரையும் பிடிக்க 4 தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT