திருச்சி: ‘ஈஷா' மையம், காருண்யா பல்கலைக்கழகம் மீது புகார்கள் வந்துள்ளதால், மீண்டும் ஆய்வுசெய்யப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஈஷா' மையம் ஒருசென்ட் நிலத்தைகூட ஆக்கிரமிக்கவில்லை என எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது. அதேசமயம், ஈஷா தொடர்பாக பலரிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்துள்ளதால், வருவாய்த் துறையின் நில அளவையர்கள் குழுவும், வனத் துறையினரும் இணைந்து மீண்டும் ஆய்வு செய்ய உள்ளோம். அங்கு ஆக்கிரமிப்புகள் இல்லாவிட்டாலும், வனத்துறை சட்டத்தை மீறியும், அனுமதி பெறாமலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல, காருண்யா பல்கலைக்கழகம் மீது எழும்குற்றச்சாட்டுகள் குறித்தும்ஆய்வு செய்யப்படும். யார்தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தின் வனப் பரப்பை 23.98 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்த அரசுத் துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10ஆண்டுகளில் இந்த இலக்கைஅடைய முடிவு செய்யப்பட்டுஉள்ளது. திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள வனஉயிரியல் பூங்காவைஅடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.