தமிழகம்

தொழிற்கல்வி ஆசிரியர் காலி பணியிட விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஜனவரியில் நடக்க உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் அரசுபள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தொழிற்கல்வி ஆசிரியர்களின் காலி பணியிட விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் எண்ணிக்கை விவரங்களை எமிஸ் தளத்தின் அடிப்படையில் பிழையின்றி பட்டியல் தயாரித்து டிச.28-ம் தேதிக்குள் துரிதமாக சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT