தமிழகம்

65 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2022-ம் ஆண்டுக்கான ஹஜ் வழிகாட்டுதல்களில் அதிகபட்ச வயது வரம்பை மாற்றம் செய்து, மும்பை இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஏற்கெனவே வெளியான அறிவிப்பில், ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்ட, 65 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதார்கள், 2022-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்துக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் 70 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் சிறப்பு வகையின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரருடன், கட்டாயம் ஒரு துணை பயணி இருக்கவேண்டும். அதேபோல, 70 வயதுக்கு மேற்பட்ட இரு பயணிகள் இருந்தால், 2 துணை பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா தொற்றுக்கு மத்தியில், ஹஜ் பயணத்துக்கு சவூதிஅரேபியா அரசால் கட்டாயமாக்கப்பட்ட நிபந்தனைகளுடன், சிறப்புச் சூழ்நிலைகளின் கீழ் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும், சவூதி அரசு மற்றும்மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் மாற்றங்களுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT