மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் இந்தியில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அரசி டம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசால் மத்திய ஆசிரியர்தகுதி தேர்வு (சிடிஇடி) நடத்தப்படுகி றது. கடந்த 20-ம் தேதி சமூக அறிவியல்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 20 வினாக்களுக்கு மேல் இந்திமொழியில் கேள்வி கள் கேட்கப்பட்டன.
புதுவையில் தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரிந்ததால் இந்தி வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.
இதுதொடர்பாக தேர்வு பொறுப் பாளர்களிடம் ஆசிரியர்கள் கேட்ட போது, அந்த வினாக்களை தவிர்த்து பிற வினாக்களுக்கு பதிலளிக்கும்படி தெரிவித்தனர். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணை பொறுத்தே ஆசிரியர் பணி வழங்கப்படும்.
20 வினாக்களுக்கு மேல் இந்தியில் கேள்விகள் இருந்ததால் புதுவையில் தேர்வு எழுதிய 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநர், புதுவை அரசு, கல்வித் துறை தலையிட்டு மறுதேர்வு நடத்தவோ அல்லது இந்தி வினாக்க ளுக்கான மதிப்பெண்களை முழுமை யாக பெறவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
20 வினாக்களுக்கு மேல் இந்திமொழியில் கேள்விகள் கேட்கப்பட்டன.