தமிழகம்

மாவட்ட செயலாளர்களுடன் 21-ல் கருணாநிதி ஆலோசனை

செய்திப்பிரிவு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 21-ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் எழுந்துள்ள சூழல், வேறு எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம், வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்திகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT