தமிழகம்

மேகேதாட்டு விவகாரத்தில் ராசிமணலில் காங்கிரஸை கண்டித்து ஜன. 18-ல் ஆர்ப்பாட்டம்: காவிரி விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்துவதைக் கண்டித்து, ஜன.18-ல் ராசிமணலில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டுவில் அணைகட்ட வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் நோக்குடன், தமிழக நலனுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் கட்சி பேரணி அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதையறிந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரி ஆணைய அனுமதி கிடைத்த பிறகு உடனடியாக அணை கட்டுமானப் பணி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில்உள்ள ராசிமணலில் புதியஅணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தியும், தமிழக காவிரிவிவசாயிகள் சங்கம் சார்பில்ஜன.16-ம் தேதி பூம்புகாரில் தொடங்கி பேரணியாக சென்று,ஜன. 18-ம் தேதி ஒகேனக்கல் ராசிமணல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

SCROLL FOR NEXT