வேளாண் விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன் சிலின் (ஐசிஏஆர்) கீழ் செயல்பட்டு வரும் 40 விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களில் வேளாண் விஞ்ஞானி பணி யில் சேருவதற்கான விண்ணப் பங்களை வேளாண் ஆராய்ச்சி யாளர் தேர்வு வாரியம் வரவேற் கிறது.
இதற்கு ஏப்ரல் 8-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் www.icar.org.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.