பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

வேலூர் அருகே லேசான நில அதிர்வு

செய்திப்பிரிவு

வேலூரில் இருந்து 50 கி.மீ. மேற்கு வடமேற்கு பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து நில அதிர்வினால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவியது.

இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 'வேலூரில் இருந்து 50 கி.மீ. மேற்கு வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. இன்று பிற்பகல் 3.14 மணியளவில் வேலூர் அருகே மேற்கு - வடமேற்கு பகுதியில் ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு வேலூரில் இருந்து 50 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் உணரப்பட்டுள்ளது' என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே கடந்த மாதம் 29-ஆம் தேதியும் இதேபோன்றதொரு நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

SCROLL FOR NEXT