சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கியமான பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஏற்கெனவே 145 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று 13 வழித் தடங்களில் 40 சிறிய பஸ்களை தொடங்கிவைத்தார். இதில், 10 சிறிய பஸ்கள் மாற்று பஸ்களாக இருக்கும்.