உதகை: நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறவில்லை. வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதை வரவேற்கும் விதமாக, உதகையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தாமஸ் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை, ஜெபகீதம் இசைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆராதனை முழுமையாக மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தில் நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது.