தமிழகம்

எர்ணாவூர் நாராயணன் புதிய கட்சி தொடக்கம்

செய்திப்பிரிவு

சமகவிலிருந்து நீக்கப்பட்ட எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கழகம் என்னும் புதியக் கட்சியை தொடங்கியுள்ளளார். வரும் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று கட்சியின் பெயரையும், அதற்கான கொடியையும் சென்னையில் அவர் அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமித்துள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை நாங்கள் ஆதரிப்போம். முதல்வர் வாய்ப்பளித்தால் நான் மீண்டும் போட்டியிடுவேன். சரத்குமார் இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றே கருதுகிறேன். விஜயகாந்த் தனித்து நிற்பேன் என்று கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 20-ம் தேதி முதல் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT