தமிழகம்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அப்போலோ தகவல்

செய்திப்பிரிவு

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக கடந்த 2018-ல் 6 ஆயிரம் பக்கங்களுக்கு 30 தொகுதிகள் அடங்கிய ஆவணங்களை வழங்கினோம். இதுவரை அப்பல்லோ மருத்துவமனையின் 56 மருத்துவர்களும், 22 மருத்துவ ஊழியர்களும் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கங்களை அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் மருத்துவ நுட்பம் சார்ந்ததுஎன்பதால், மருத்துவ வல்லுநர்கள் குழுஅமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தற்போது மருத்துவ வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அப்போலோ மருத்துவமனை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அது இனிமேலும் தொடர்ந்து வழங்கும்.ஆணையத்தை கலைப்பது எங்களது நோக்கம்இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT