காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை வழங்குகிறார் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலர் லால்வீனா. உடன் ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலலர் குமார். 
தமிழகம்

காஞ்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆய்வுக் கூட்டம்: தேசிய அடையாள அட்டை பதிவு, வங்கி கடன் மேளாவும் நடைபெற்றன

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார். மாற்றுத் திறனாளிகள் அரசுச் செயலர் லால்வீனா மாற்றுத் திறனாளிகள் திட்டங்கள் குறித்து பேசினார். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை துரிதமாக வழங்க அறிவுறுத்தினார்.

5 சதவீதம் இட ஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் பதிவு செய்ய வேண்டும். பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தினார்.

மேலும் இருகால்கள் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3,82,500 மதிப்புள்ள இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து தேசிய ஊனமுற்ரோர் மேம்பாட்டு நிதிக்கழக திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் பெற சிறப்பு வங்கிக் கடன் மேளா நடத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி

இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு, வங்கி கடன் மேளா ஆகியவை நடைபெற்றன. மேலும் இந்த முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசியும் போடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுலர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT