`தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்காக இருக்கும். அத்துடன் அனைத்து மருத்துவமனைகளிலும் மது அடிமைகள் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்’ என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே வெங்காடம் பட்டியில் நேற்று பூரண மதுவிலக்கு குறித்த அரசியல் சார்பற்ற பெண்கள் மாநாடு நடைபெற்றது. மதுவால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்கள், விதவையர், கைவிட ப்பட்ட பெண்கள், முதியோர், மாணவிகள் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசியதாவது:
மதுவிலக்கு கொண்டுவரு வது சாத்தியமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்து கருணாநிதி முதல் கையெழுத்திட்டார். அதேபோல், திமுக மீண்டும் ஆட்சிக்குவந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்து இடப்படும். மதுவால் இளம் விதவைகள் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது பெண்களின் குரலாக மட்டுமில்லாமல் மாணவர் கள், இளைஞர்கள் என்று ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக தற்போது ஒலிக் கிறது. அது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு கேட்காது. பூரண மதுவிலக்கு கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி நிறைவேற்றுவார். அதற்கான உறுதியை அவர் அளித்திருக்கிறார்.
குடும்பத் தலைவர்கள் பலரும் தற்போது காலையிலேயே வேலைக்குச் செல்லாமல் மதுக்கடை களுக்கு செல்லும் அளவுக்கு மதுவுக்கு அடிமை யாகியுள்ளனர். அவர்களை மீட்டெடு க்க வேண்டியது அரசின் கடமை. எனவே, திமுக ஆட்சி அமைந்ததும் மது அடிமைகளை மீட்கவும், அவர்களது மறுவாழ்வுக்கும் மருத்துவமனைகளில் மது அடிமைகள் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார் கனிமொழி.