தமிழகம்

தமிழக அச்சகங்களுக்கு மட்டுமே பாடப் புத்தகம் அச்சடிக்கும் பணி: அரசாணையில் திருத்தம் செய்ய முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை தமிழக அச்சகங்களுக்கு மட்டுமே வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

பள்ளிக்கல்வியில் 1 முதல்பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தக்கங்கள், கையேடு, வினா-வங்கி விநியோக பணிகளை தமிழ்நாடு பாடநூல் கழகம் மேற்கொண்டு வருகிறது.

வழக்கமாக புத்தக அச்சிடுதல் பணிகள் தமிழக அச்சகங்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அப்பணிகள் ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பாடநூல் அச்சிடுவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புத்தகங்களை அச்சடிக்கும் பணியை தமிழகஅச்சகங்களுக்கு மட்டுமே வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் மேற்கொள்ள பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாடநூல் கழக அதிகாரிகள் கூறியபோது, ‘‘புத்தகங்கள் அச்சடிக்கும் பணிக்கான ஒப்பந்தத்தில் அனைத்து மாநிலத்தினரும் பங்கேற்கலாம் என்ற நடைமுறை 2010-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில அச்சகங்களும் கலந்துகொள்ளும் நிலைஉள்ளது. இதை தவிர்க்க, பாடநூல் அச்சடிக்கும் பணியை முழுவதும் தமிழக அச்சகங்களுக்கே வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT