தமிழகம்

நலவாழ்வு மையங்களில் தற்காலிகமாக 7,296 செவிலியர், ஆய்வாளர் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கிராம சுகாதார சேவையை மேம்படுத்த நலவாழ்வு மையங்களில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் 7,296 பேர் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

கிராம சுகாதார சேவையை மேம்படுத்த நலவாழ்வு மையங்களில் தற்காலிக அடிப்படையில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். செவிலியருக்கு ரூ.14 ஆயிரம், சுகாதார ஆய்வாளருக்கு ரூ.11 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கரோனா தொற்றுகாலத்தில் பணியாற்றியவர்கள், உள்ளூரில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில், சமூக நீதியை காக்கும் வகையில் தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை கடைபிடித்து நலவாழ்வு மையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 2,448 பேர், இடைநிலை சுகாதார பணியாளர்கள் 4,848 பேர் என மொத்தம் 7,296 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT