தமிழகம்

நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுற்றித்திரியும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

செய்திப்பிரிவு

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் மீண்டும் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அப்பகுதியில் தற்போது யானை ஒன்று முகாமிட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி அருகே தனியார் தேயிலை தோட்டத்தில், அந்த யானையின் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், ஹெலிகாப்டர் பாகங்கள் மீட்புப் பணிக்கு யானை நடமாட்டம் இடையூறாக இருக்கும் என்பதால், வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT