கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, மிலாடி நபி விழாக்குழுவைச் சேர்ந்த இஸ்லாமிய சசோதரர்கள், ஐயப்ப பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அஸ்லம் தலைமையில், இஸ்லாமிய சகோதரர்கள் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர், மீலாடி நபி விழாக்குழு செயலாளர் கராமத், பொருளாளர் ஜாமீர், தமிழக தர்காக்கள் பேரவையின் மாநில முதன்மை செயலாளர் ஆசாத் காதிரி, துணைத்தலைவர் நதீம்கான் மற்றும் ஷாஜகான், பப்லு ஆகியோர் ஐயப்ப பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறினர். இதில், கோயில் நிர்வாகிகள் சிவதாஸ், பழனிசாமி, வேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.