சிலம்பத்தை தேசிய விளையாட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா கல்லூரியில் தமிழக மக்கள் மன்றம் சார்பில் சிலம்பக் கலைக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு சிலம்பப் போட்டியும் நடந்தன.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
கடந்த ஆட்சியில் விளை யாட்டுத்துறை செயல்படாமல் இருந்தது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 7 மாதங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
கல்வி, அரசு வேலைவாய்ப்பில் சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. தேசிய விளை யாட்டு போட்டியிலும், அரசு பாடத்திட்டத்திலும் சிலம்பத்தைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுந்தர், விவே கானந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.
தொடர்ந்து அமைச்சர் மெய்ய நாதன் காரைக்குடி அருகே வேலங்குடி செலக்டேட் புளூஸ் கால்பந்து கழக விளையாட்டுத் திடலை பார்வையிட்டார்.