சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தமாகா-வில் இணையும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
அதில் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு, கட்சியில் இணைந்த மாணவர்களுக்கு அடை யாள அட்டைகளை வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பெரும்பாலான கட்சிகள், தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வில்லை. ஒவ்வொரு கட்சியும், கூட்டணி அமைப்பது குறித்து, ஓர் அணுகுமுறை மற்றும் வியூ கத்தை கடைபிடிக்கும். இதில் தமாகா விதிவிலக்கு இல்லை. கூட்டணி குறித்து தமாகாவின் நிலைப்பாட்டை, உரிய நேரத்தில் அறிவிப்பேன்’’ என்றார்.