தமிழகம்

`பள்ளி பாதுகாப்பான இடம் இல்லை’ என கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை

செய்திப்பிரிவு

மாங்காடு பகுதியைச் சேர்ந்த பூந்தமல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மாங்காடு போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, விசாரணையில் கடந்த சில நாட்களாக இந்த மாணவி தனக்கு நெருக்கமான தோழிகளிடம்கூட பேசாமல், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் ’பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள். யாரையும் நம்ப கூடாது. பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறை மட்டுமே. பள்ளி பாதுகாப்பான இடம் இல்லை. எனக்கு நீதி வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடிதத்தில் தற்கொலைக்கான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்கொலை செய்துகொண்ட இந்த மாணவிதான் இந்த கடிதத்தை எழுதினாரா எனவும், தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்தும் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT