சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேர் திருவிழா நடத்த கோரி பாஜக, இந்து முன்னணியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று (டிச.19) தேர்த்திருவிழாவுக்கு அனுமதி அளிக்கக்கோரி நேற்றிரவு கீழ வீதியில் கோயிலின் வாயிலில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர் திருவிழா நடத்தவும். தரிசன விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் கீழ வீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலை சுற்றியுள்ள பகுதியில் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் போலீ ஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.