புதுச்சேரி மருந்தகங்கள், வணிக நிறுவனங்களில் சுகாதாரத் துறை யினர் சோதனை நடத்தினர். அப்போது தடுப்பூசி போட மறுத்த வரின் கடை பூட்டப்பட்டு, வீட்டுக்குஅனுப்பப்பட்டார். மேலும், முகக் கவசம் அணியாமல் பணிபுரிந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் நக ராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.
புதுச்சேரியில் கரோனா தடுப்பூசிபோடுவதை மாநில சுகாதாரத்துறை கட்டாயமாக்கி உள்ளது. இதன்காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ராமுலு, புதுச்சேரி- உழவர் கரை நகராட்சி வருவாய் அதி காரி சாம்பசிவம் ஆகியோர் தலை மையிலான குழுவினர் நேற்று புஸ்சி வீதியில் உள்ள மருந்தகங்கள், தனியார் கிளினிக்குகள், வணிகநிறுவனங்கள், மதுபான கடைக ளில் சோதனை நடத்தினர். மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுக்களும் உடன் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் கரோனாதடுப்பூசி போட்டுக்கொண்டதற் கான சான்றிதழ்களை கேட்டனர். இதில் தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதையேற்று சிலர் ஊசி போட்டுக் கொண்டனர்.
அங்கு ஒரு மருந்தக கடையில் இருந்த ஊழியர் தடுப்பூசி போட மறுத்தார். அவரிடம் தடுப்பூசி செலுத்திய பிறகே கடைக்குள் வர வேண்டுமென அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதேபோல், மற்ற கடைகளில் தடுப்பூசி போட மறுத்த ஊழியர்களையும் தடுப்பூசி போட்ட பிறகே பணிக்கு வருமாறு கூறி வீட்டுக்கு அனுப்பினர்.
தொடர்ந்து காந்தி வீதியிலும் இக்குழுவினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது முகக்கவசம் அணியாமல் வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள், கிளினிக்குகள், மதுபான கடைகளில் இருந்தவர்களுக்கு நகராட்சி குழுவினர் தலா ரூ.100 வீதம் 20-க்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூலித்தனர். இதேபோல் நகர பகுதி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சுகாதாரத் துறையும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகமும் கூட்டாக இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் சுகாதாரத்துறை செயலர் உதயகு மார் கூறுகையில், ‘‘பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறி வுறுத்தி வருகிறோம்.
முகக்கவசம் போடாதவர் களுக்கு நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் சில இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக பொய் கூறுகிறார்கள். அவர்களது ஆவணங்களை எடுத்து பார்த்தபோது தடுப்பூசி போடாதது தெரிகிறது. ‘தடுப்பூசி போடவில்லை என்றால் வேலை செய்ய முடியாது’ என்று கூறிய தும், உடனே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தடுப்பூசி போட மறுப்போரின் கடைகளை மூடிவிடுகிறோம். தடுப்பூசி போட்ட வர்கள் மட்டுமே கடையில் பணிபுரிய வேண்டும்.
ஊசி போட்டுக் கொள்ளாத வர்களை வீட்டுக்கு அனுப்ப வேண் டும். இல்லையென்றால் கடையை மூடி விடுவோம். இதேபோல் அரசுத்துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் தடுப்பூசி போட வைக் கிறோம். போடாதவர்களை அலுவலகத்துக்கு வரக்கூடாது என சொல்ல உள்ளோம் என்று தெரிவித்தார்.