ஒமைக்ரான் அச்சுறுத்தலால் தமிழகத்தில் தடை விதித்த போதிலும் புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியால் கூடுதல் பயணிகள் வர வாய்ப்புள்ளது. கலை நிகழ்வுகள் நடத்த டெண்டர் கோரப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை யொட்டி வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதுண்டு. கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 2019-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. 2020 டிசம்பரில் தொற்று குறைந்து, புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தாலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது.
தற்போது கரோனா பரவல் முற்றிலுமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24, 25-ம்தேதி மற்றும் புத்தாண்டையொட்டி 30, 31, ஜனவரி 1-ம் தேதிகளில் இரவு நேரங் களில் இரவு 2 மணி வரையிலும் சமூக கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது, “கடற்கரை சாலை, துறைமுக வளாகம், படகு குழாம், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த டெண்டர் கோரப்பட் டுள்ளது” என்று குறிப்பிடுகின்றனர்.
வர்த்தகர்கள் தரப்பில் விசாரித்தபோது, “தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வழக்கத்தை விட இம்முறை கூடுதலாக சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வர வாய்ப்புள்ளது. ஹோட்டல் அறைகளில் முன்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. ஹோட்டல்களிலும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் கரோனா விதிமுறைப்படி நடத்த அனுமதி கிடைக்க வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டனர்.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஒமைக் ரானால் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை. புதுச்சேரியில் அனுமதி அளித்துள்ளது வியப் பாக இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய் தொற்றின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் இருந் தது. இதனால் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. புத்தாண்டை காரணம் காட்டி பொது இடங்களில் மது அருந்துவோர், வேகமாக வாகனங்களை இயக்குவது என எல்லை மீறுவோர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.