மதுரையில் நடந்த தொ.பரமசிவன் நினைவு ஆய்வுக் கருத்தரங்கில் பேசிய கு.ஞானசம்பந்தன். 
தமிழகம்

மாணவர்கள் வெற்றியை தன்னுடைய வெற்றியாக கருதியவர் தொ.பரமசிவன்: மதுரையில் நடந்த கருத்தரங்கில் கு.ஞானசம்பந்தன் பேச்சு

செய்திப்பிரிவு

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் நினைவு ஆய்வுக் கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் பேசுகையில், "தொல்லியல் துறையில் எங்கள் முன்னோடி தொ.ப. இப்போது அவர் இருந்திருந்தால், கீழடி, கொற்கை அகழாய்வுகளைக் கண்டு மகிழ்ந்திருப்பார்" என்றார்.

சிவகங்கை பேராசிரி யரும், தொ.ப.வின் நண்பருமான ம.பெ.சீனிவாசன் பேசுகையில், நாத்திகரான தொ.ப. அழகர்கோயில்குறித்தும், மதுரைமீனாட்சி குறித்தும் ஆய்வுசெய்து வெளிப்படுத்திய தகவல்கள் அற்புதமானவை" என்றார்.

பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் பேசுகையில், "எல்லாவற்றையும் நுணுக்க மாகப் பார்த்து, அரிய தகவல்களை வெளிப்படுத்தி யவர் தொ.ப. மாணவர்களின் வெற்றியை தன்னுடைய வெற்றியாகக் கருதியவர் அவர்" என்றார்.

தமிழக சுங்க மற்றும் கலால் வரித்துறை ஆணை யர் சா.ரவிசெல்வன் பேசுகை யில், "பெரியாரையும், அண்ணாவையும் நேசித்த தொ.ப. திராவிட இயக்கத் தலைவர்கள் தவறு செய்தால் அதை விமர்சிக்கவும் தயங்கி யதில்லை" என்றார்.

முன்னதாக பேராசிரியர் கா.சாகுல்ஹமீது வரவேற் றார். பேராசிரியர் க.முத்துவேல் நன்றி கூறினார். தொ.ப.வின் மனைவி இசக்கியம்மாள், மகள் விஜயலட்சுமி ஏற்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொ.ப.வின் மாணவர்களும், இன்றைய பேராசி ரியர்களுமான ஆ.அழகுசெல்வம், ஆ.த.பரந்தாமன், இரா.தமிழ்க்குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT