தமிழகம்

சூடுபிடிக்கும் புதுச்சேரி தேர்தல் களம்: கூட்டணி அறிவிப்புக்கு முன் ரங்கசாமியின் சாமி தரிசனம்

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முன்பாக பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டகாரன்புதூர் அழுக்குசாமியார் கோயில் சித்தர் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு நடத்தினார்.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளோம். அதனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதுதான் எனது எண்ணமும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் ஆகும். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

தேர்தல் நிலவரம் குறித்து என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, மீண்டும் போட்டியிட சீட்டு கிடைக்காது என்பதால் சிலர் கட்சியிலிருந்து விலகி சென்றுள்ளனர்.‘தேசிய கட்சியும் இந்த முறை எங்களுடன் கூட்டணியில் இணைவது குறித்து பேசி வருகிறது. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர், வேட்டைக்காரன்புதூரில் உள்ள அழுக்குசாமியார் கோயிலுக்கு வந்து, சித்தர் ஜீவசமாதியில் முதல்வர் வழிபாடு நடத்துவது வழக்கம். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், கோயிலில் வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்ய வந்துள் ளார் ரங்கசாமி’ என்று தெரிவிக் கின்றனர். ரங்கசாமியுடன் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் உள்ளிட்டோரும் வந்திருந் தனர்.

SCROLL FOR NEXT