கோப்புப் படம் 
தமிழகம்

ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை

செய்திப்பிரிவு

சென்னை: ஜனவரி 12-ம் தேதி நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2022-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி விமானம் மூலம் சென்னை வர இருக்கிறார். மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. பிறகு தமிழகத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT