தமிழகம்

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

இ.மணிகண்டன்

விருதுநகர்: முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்பட அதிமுகவினர் 904 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கெனவே இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டிராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதை எடுத்து 6 தனிப்படைகள் அமைப்பு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே திமுக அரசை கண்டித்து விருதுநகரில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரோனா தடுப்பு விதிகள் அமலில் உள்ளதால் எவ்வித முன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, இன்பத்தமிழன், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், நகரச் செயலர் முகமது நயினார், ஒன்றியச் செயலர்கள் தர்மலிங்கம், கண்ணன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி கலாநிதி உள்பட 600 பேர் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று சாத்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் கருப்பசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி, மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் செய்து ராமானுஜம் உள்ளிட்ட 304 பேர் மீது சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT