‘‘உரிய ஆதாரமின்றி முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட மாட்டார்கள்,’’ என இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
சிவகங்கையில் செய்தியாளர்க ளிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர், வேறு பணிகளுக்குச் சென்று வருகிறார். சமீபத்தில் வாரணாசியில் நடந்த கோயில் விழாவில் இந்தியா மத சார்பற்ற நாடு என்பதை மறந்து, மதவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதற்காக, மக் களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடு சென்ற வர்கள் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை. ஆனால், வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்று வருகின்றனர்.
ஆதாரமில்லாமல் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட மாட்டார்கள். சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடன் இருந்தார்.