தமிழகம்

அதிமுகவுக்கு அமைப்புகள் ஆதரவு

செய்திப்பிரிவு

அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்ப தாக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட குழு வினரிடம் பல்வேறு அமைப்புகள் தெரிவித்தன.

அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை 7 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கடந்த வாரம் சந்தித்து தேர்தலில் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து தொகுதி பங்கீட்டுக்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகனுடன் அதிமுக சார்பில் அமைச்சர்கள் வைத்தி லிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகி யோரைக் கொண்ட குழு முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், கட்சியில் சில நாட்களாக ஓரங்கட்டப்பட்டிருந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் இருவரும் நேற்று அதிமுக தலைமை அலுவல கத்துக்கு வந்திருந்தனர். அவர்களை மக்கள் தேசிய கட்சித் தலைவர் சேம.நாராயணன், திராவிட மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் எம்எல்ஏ குறளரசு ஜெயபாரதி, நிலத் தரகர் சங்கத் தலைவர் கண்ணன் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து, தேர் தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT